ராயல் என்ஃபீல்டின் ‘ஹிமாலயன் 750’! எப்போது அறிமுகம்?
ராயல் என்ஃபீல்டின் ‘ஹிமாலயன் 750’ பைக் பற்றி...
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது புதிய ஹிமாலயன் 750 ரக அட்வென்சர் பைக்கை உருவாக்கி வருகிறது.
தற்போது இந்தியாவில் விற்பனையாகி வரும் ஹிமாலயன் 450 பைக்கின் அடுத்தகட்ட மாடலாக ஹிமாலயன் 750 உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த பைக் 750 சி.சி. பேரல் இரட்டை என்ஜினுடன் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஹிமாலயன் பைக்களில் உள்ள 21-அங்குல சக்கரங்களுக்குப் பதிலாக 19-அங்குல சக்கரம் மற்றும் சற்று உயரமான இருக்கை அமைப்பு ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
பவர், டார்க் போன்ற விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
நீண்ட தொலைவுக்கு பயணம் மேற்கொள்ளும் அட்வென்சர் ரைடுகளுக்கு ஏற்ற வகையில் புளூடூத் இணைப்பு, டிராக்ஷன் கன்ட்ரோல், ரைடு மோடுகள் போன்றவை இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாதத் தொடக்கத்தில் லடாக்கின் லே பகுதியில் நடைபெற்ற ராயல் என்ஃபீல்ட் விழாவில் ஹிமாலயன் 750 பைக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் ஹிமாலயன் 750 பைக்கின் விலை ரூ. 4 லட்சத்துக்கும் மேல் இருக்கும் எனத் தெரிகிறது.
Royal Enfield’s ‘Himalayan 750’! When will it be launched?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.