துபையில் சீன் இசை வெளியீட்டு விழா!
சீன் இசை வெளியீட்டு விழா குறித்து...
சீன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் 47 ஆவது திரைப்படம் சீன். மலையாளத்தில் ஆவேசம் திரைப்படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.
சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சூர்யாவும் நாயகியாக நஸ்ரியாவும் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இப்படத்தின் இசையமைப்பாளரான சுஷின் ஷ்யான் இசையமைப்பில் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இந்த நிலையில், சீன் இசை வெளியீட்டு விழா வருகிற அக். 25 ஆம் தேதி துபையில் உள்ள சிலிக்கான் சென்ட்ரல் மாலில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நவ. 6 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரைலரும் விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The audio launch of the movie Scene has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.