சிறுவர்மணி

கொலுப்பாட்டு!

DIN

கொலுப்பாட்டுப் பாடுவோம் - கை
கொட்டி கொட்டி ஆடுவோம்!
நன்மைகளைப் பெற்றிடுவோம்
நாமகளைப் போற்றிடுவோம்!

தாவிக் குதிக்கும் முயல் பொம்மை
தலையாட்டும் தஞ்சை பொம்மை
தாலி கட்டும் ஜோடி பொம்மை
தவழ்ந்து வரும் குழந்தை பொம்மை!

துள்ளி ஓடும் மான் பொம்மை
வள்ளியோடு முருகன் பொம்மை!
அள்ளிப் பருகும் யானை பொம்மை
பள்ளி போகும் குழந்தை பொம்மை!

பலவண்ணப் பழங்கள் பொம்மை
பச்சைக் காய்கறிகள் பொம்மை!
பஞ்சவர்ணக் கிளி பொம்மை
பஞ்சலோக சாமி பொம்மை!

மதுரை வீரன் குதிரை பொம்மை
மதுரை மீனாட்சி பொம்மை!
மறவாமல் எடுத்து வைப்போம்
மங்கல மரப்பாச்சி பொம்மை!

படிப்படியாய் படி அமைத்தே
பார்த்துப் பார்த்துப் பொம்மை வைப்போம்!
பாங்குடனே அடுக்கி வைத்து
பரவசமாய் மகிழ்ந்திடுவோம்!

பொம்மையென்று நினைக்க மாட்டோம்!
உண்மை என்றே நம்பிடுவோம்!
நன்மைகளைப் பெற்றிடுவோம்
நாமகளைப் போற்றிடுவோம்!

- கோவை சு.சுந்தரேஸ்வரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT