சிறுவர்மணி

நினைவுச் சுடர் !: அமுதம்! 

ராமகிருஷ்ணர் ஒரு நாள் சீடர்களை அழைத்து, ""நீங்கள் ஒரு ஈயின் உருவத்தைப் பெற்றிருக்கிறீர்கள் என் வைத்துக் கொள்ளுங்கள்!....உங்கள் எதிரில் அமுதம் நிறைந்த ஒரு கோப்பை இருந்தால் என்ன செய்வீர்கள்?'' எனக் கேட்

உ. இராஜமாணிக்கம்


ராமகிருஷ்ணர் ஒரு நாள் சீடர்களை அழைத்து, ""நீங்கள் ஒரு ஈயின் உருவத்தைப் பெற்றிருக்கிறீர்கள் என் வைத்துக் கொள்ளுங்கள்!....உங்கள் எதிரில் அமுதம் நிறைந்த ஒரு கோப்பை இருந்தால் என்ன செய்வீர்கள்?'' எனக் கேட்டார்.

கேள்வியின் தன்மையைப் புரிந்து கொள்ளாத சீடர்கள் பதில் தெரியாமல் திகைத்தனர். 

ஒரு சீடர் மட்டும், ""நான் அந்தக் கோப்பையில் உள்ள அமுதத்தை மெல்ல பறந்து கொண்டே பருகுவேன்!....அவசரப்பட்டு கோப்பையில் விழுந்து உயிரை விட மாட்டேன்!'' என்றார்.

ராமகிருஷ்ணர் சிரித்துக்கொண்டே, ""நீ ஒரு விஷயத்தை அடியோடு மறந்து விட்டாய்!....''

""என்ன அது?'' என்று கேட்டான் சீடன்.

அதற்கு ராமகிருஷ்ணர், ""கோப்பையில் இருப்பதோ அமுதம்!....அமுதத்தை உண்டால் மரணமே இல்லை!.....அப்படியிருக்க கோப்பையின் பறந்து கொண்டே உட்கார்ந்தாலும், அமுதத்திலேயே விழுந்தாலும் என்ன ஆகிவிடும்?'' என்றார். 

சீடன் திகைத்து நின்றான்!

அந்த சீடன்தான் பின்னாளில் விவேகானந்தர் என அழைக்கப்பட்டார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழா்கள் ஆா்வம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

அரசு மருத்துவா்களுக்கு எதிராக வழக்கு: உயா்நீதிமன்றம் கேள்வி

புதுகை மாநகரில் 24 மணி நேரமும் மது விற்பனை

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை பவன் கேரா

SCROLL FOR NEXT