முகப்பு
சிறுவர்மணி

 அங்கிள் ஆன்டெனா

கருவுற்றிருக்கும் தாய்மார்கள், நடப்பதற்கே சிரமப்படுகின்றனர். ஆனால் கர்ப்பமடைந்த பறவைகள் எப்படி தங்கள் உடல் எடையோடு வயிற்றில் உள்ள முட்டைகளையும் சுமந்து கொண்டு பறக்கின்றன?

Updated On : 1 டிசம்பர், 2018 at 3:55 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 11:16 PM


கேள்வி: கருவுற்றிருக்கும் தாய்மார்கள், நடப்பதற்கே சிரமப்படுகின்றனர். ஆனால் கர்ப்பமடைந்த பறவைகள் எப்படி தங்கள் உடல் எடையோடு வயிற்றில் உள்ள முட்டைகளையும் சுமந்து கொண்டு பறக்கின்றன?

பதில்: பறக்கும் பறவைகள் இதற்காக "ஒற்றை சூல்பை வளர்ச்சி' என்கிற ஒரு டெக்னிக்கை வைத்திருக்கின்றன. இது இயற்கை அவற்றுக்குத் தந்த வரப்பிரசாதம். ஊர்வன வகை விலங்குகளெல்லாம் ஒரே நேரத்தில் அதிக அளவு எண்ணிக்கையில் முட்டைகளையோ குஞ்சுகளையோ இடும்.

பறவைகளுக்கு பறக்க வேண்டிய வேலையும் இருப்பதால் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக ஒரு நேரத்தில் ஒரு முட்டை மட்டும் முதிர்ச்சி அடையும். அது முழுமையடைந்து வெளியறிய பிறகுதான் அடுத்த முட்டையின் வளர்ச்சி ஆரம்பிக்கும்.

Advertisement

மேலும் முழு வளர்ச்சியடைந்த முட்டை பறவையின் வயிற்றில் இருக்கும் கால அவகாசம் மிகவும் கம்மி. எனவே சுமக்கும் சிரமும் கம்மி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.