முகப்பு
சிறுவர்மணி

முத்துக் கதை!: சைக்கிள்

விவேக் வீட்டுத் தாழ்வாரத்தில் புதிய ஸ்கூட்டரும், அதனருகில் பழைய சைக்கிள் வண்டியும் நிறுத்தப் பட்டிருந்தன.

சிறுவர்மணி

முத்துக் கதை!: சைக்கிள்

விவேக் வீட்டுத் தாழ்வாரத்தில் புதிய ஸ்கூட்டரும், அதனருகில் பழைய சைக்கிள் வண்டியும் நிறுத்தப் பட்டிருந்தன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

விவேக் வீட்டுத் தாழ்வாரத்தில் புதிய ஸ்கூட்டரும், அதனருகில் பழைய சைக்கிள் வண்டியும் நிறுத்தப் பட்டிருந்தன. ஸ்கூட்டர் வாங்கி ஒரு வாரம் ஆகின்றது.  ஆம். அருகில் நிற்கிற சைக்கிள் வண்டிக்கு ஓய்வு வழங்கி ஒரு வாரம் ஒடிவிட்டது. ஸ்கூட்டர் வாகனம், சைக்கிள் வண்டியை ஏளனமாகப் பார்த்தது. இதனைக் கவனித்த சைக்கிள், ஸ்கூட்டரை முறைத்துவிட்டு?. பேசத்தொடங்கியது.
""எதுக்கு என்னய ஒரு மாதிரியப் பாக்குற?''
""ஒன்னயப் பாத்தாப் பரிதாபமா?  இருக்கு..''
""என்னயப் பாத்து நீ எதுக்குப் பரிதாபப் படுற?''
""இந்த வீட்டுல? இனிமே யாரு ஒன்னய எடுத்து ஓட்டப் போறாங்க.. புது டூவீலரான என்னய வாங்கின பிறகு ஒன்னயப் பயன்படுத்த யாருக்கும் பைத்தியமா பிடிச்சிருக்கு?''
""நீ டூவிலர்னா? நான் யாரு? எனக்கு என்ன ஒரு வீல் மட்டுந்தானா இருக்கு..?  ஆசிரியருக்கு ஆங்கிலத்தில டீச்சர்னு பேரு? ஆனா இங்க ஆசிரியைகளைத்தான் டீச்சர்னு சொல்றாட்ங்க?. ஆசிரியர்கள "சார்னு' கூப்பிடுறாங்க?... அது மாதிரித்தான்?... உன்னய டூவிலர்னு சொல்றது?.... பள்ளிக் கூடத்தில ஆசிரியர் வேல பாக்கிற எல்லாருமே டீச்சர்கள்தான்? அது போல ரெண்டு சக்கரம் உள்ள வாகனமெல்லாம் டூவீலர்தான்? முதல்ல அதப் புரிஞ்சுக்கோ!..''
""உதவாக்கரையாப் போகப் போறேன்னு சொன்னா.. அதுக்குப் பதில் சொல்லாம டுவிலருக்கு வியாக்யானம் தந்துக்கிட்டு இருக்க?''
""ஒருக்காலத்திலயும் நான் உதவாக்கரையா ஆக மாட்டேன்? மொதல்ல உதாவாக்கரைன்னு எதுவும் கிடையாது? எந்தப் பொருளும் எதாவது ஒண்ணுக்கு உபயோகப்படும்.. அதனாலதான் சிறு துரும்பம் பல்குத்த உதவும்னு பெரியவுங்க சொல்லி இருக்காங்க தெரிஞ்சுக்க!....''
""நான் வந்ததிலே இருந்து இந்த வீட்டு மனுசன் விவேக் உன்னயக் கண்டுக்கிடவே  இல்லைன்னு சொல்ல வந்தா? அத ஒத்துக்கிடாம தத்துவம் பேசிக்கிட்டு இருக்க?...''
""இப்ப நீ புதுசு? புதுப்பொருள பயன்படுத்திக் கிட்டே இருக்க ஆரம்பத்தில எல்லாரும் ஆசைப்படத்தான் செய்வாங்க? போகப்போக பாரு?...''
""போகப் போக என்னயப் பயன்படுத்த மாட்டாங்கன்ன சொல்ல வாரீயா?...''
""நாளாக? நாளாக? எங்கயாவது  ரெம்ப தூரம் போனாத்தான் ஒன்னய உபயோகப் படுத்துவாரு விவேக்? பால்வாங்க? பலசரக்கு கடைக்குப் போக? காய்கறி வாங்க.. . இப்படிப்பட்ட வேலைகளுக்கு என்னயப் பயன்படுத்தறதுதான் செளகரியம்னு அனுபவத்தில புரிஞ்சுக்கிடுவாரு? ஒன்னய ஓட்டும் போது ஹெல்மெட் போடணும்? பெட்ரோல் இருக்கணும்? என்னய ஓட்டுறதுல இந்தத் தொந்தரவுங்க கெடையாது தெரியுமா?...''
""சும்மா பகற் கனவு கண்டுக்கிட்டு இருக்காத?....''
""யார் பகற்கனவு காண்கிறான்னு நாளாக நாளகத் தெரியும்....''
அப்பொழுது வீட்டுக்கார விவேக் வந்து ஸ்கூட்டர் வாகனத்ததை எடுக்க, ஒருவித திமிர் பார்வையை சைக்கிள் மீது செலுத்தியது ஸ்கூட்டர்!
சைக்கிள் கண்டு கொள்ளவும் இல்லை. இதற்காக கவலைப் படவும் இல்லை.
நம்மை  வீட்டுக்கார விவேக் நம்மை உதாசீனப் படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை சைக்கிள் வண்டியிடம் நிறைய இருந்தது.
ஓல்டு இஸ் கோல்டு அல்லவா..? என்கிற பழமொழியும் அதன் நினைவில் வலம் வரத் தவறவில்லை.
நாட்க்கள் நகர்ந்தன.  அன்று விவேக் அலுவலகம் செல்வதற்கு சைக்கிள் வணடியை இறக்கினான.;  
""என்னங்க சைக்கிள்யா ஆபீசுக்குப் போகப் போறீங்க?...'' என்றாள் விவேக்கின் மனைவி விமலா. 
""ஆமா விமலா? எங்க ஆபீஸ்ல வேல பாக்கிற எல்லாருக்கும் இலவச மருத்துவ பரிசோதன பண்ணினாங்க? அதுல என்னோட ஒடம்பில கொழுப்புச் சத்து கூடியிருக்கு? உழைப்புக் குறைவே இதுக்கு காரணம்? அதனால தெனமும் ஒரு மணிநோரம் சைக்கிளிங் போங்கன்னு சொன்னாங்க?. தனியா நாம எங்க சைக்கிளிங் போறது?...  ஆபீசுக்கே தெனமும் சைக்கிள்லயே போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்? அவசரத்துக்கு அல்லது நாம ரெண்டு பேரும் போகிற, கோவில், கடைகண்ணி சமாச்சாரங்களுக்கு மட்டும் ஸ்கூட்டரில்  போவோம்...''
""சரிங்க அப்பிடியே செய்யிங்க?. ஸ்கூட்டர் ஓட்றது ஒடம்புக்கு சொகத்தக் கொடுக்கும்? சைக்கிள் அழுத்துறது ஒடம்புக்கு உழைப்பைத் தரும்? ஒழைக்கிற ஒடம்பில நோய் அண்டாதுன்னு சொல்வாங்க?...''
இந்த உரையாடலை உன்னிப்பாக கவனித்த மொபெட் வாகனம், தன்னை விட தாழ்ந்தது சைக்கிள் என்கிற தனது மனப்போக்கை மாற்றிக் கொண்டது.

முழு கட்டுரையைப் படிக்க →