கதைப் பாடல்: பலூன் பாடம்!
வெள்ளரிக்காய் பலூன் ஒன்று விரும்பி நானும் வாங்கினேன்!
சிறுவர்மணிகதைப் பாடல்: பலூன் பாடம்!
வெள்ளரிக்காய் பலூன் ஒன்று விரும்பி நானும் வாங்கினேன்!
வெள்ளரிக்காய் பலூன் ஒன்று
விரும்பி நானும் வாங்கினேன்!
உள்ளிழுத்து ஊதும் காற்றில்
உடைந்து சோகம் தாங்கினேன்!
பூசணிக்காய் பலூன் ஒன்று
பொறுத்து நானும் வாங்கினேன்!
ஆசையோடு ஊதும்போது
அதுவும் உடைந்து ஏங்கினேன்!
முடிவில் முயல் பலூன் ஒன்று
முயன்று நானும் வாங்கினேன்!
கடிதில் அதுவும் உடைந்து போகக்
கடையை விட்டு நீங்கினேன்!
சேர்த்தகாசு தீர்ந்த தென்று
தேம்பிக் கண்கள் வீங்கினேன்!
பார்த்துச் செலவு செய்வதென்ற
பாடம் கற்றுத் தூங்கினேன்!