அறுவடைத் திருநாள்!
காளையும் உழவரும் கழனியில் உழைத்து
சிறுவர்மணிஅறுவடைத் திருநாள்!
காளையும் உழவரும் கழனியில் உழைத்து
காளையும் உழவரும்
கழனியில் உழைத்து
வேளையில் தெளிக்கும்
விதையினம் முளைக்கும்!
வேருடன் களைகளை
வெட்டி அழித்து
நீருரம் செலுத்தி
நிறைகதிர் விளைக்கும்!
சீருடன் விளைத்த
செந்நெல் அறுத்துப்
பாரினை வருத்தும்
பசிப்பிணி துரத்தும்!
மேழியின் சிறப்பை
மேதினிக் குரைக்கும்
வாழையும் கரும்பும்
வாசலில் சிரிக்கும்!
காலையில் கிழக்கில்
கதிரவன் உதிக்கப்
பாலுடன் பொங்கல்
பானையில் கொதிக்கும்!
ஆதவன் நமக்கு
அளித்திடும் நலத்தை
பூதலம் மதித்துப்
புகழ்படத் துதிக்கும்!