சிறுவர்மணி

கடலும் உப்பும்!

கடல் நீரைக் குடித்தால் உப்புக் கரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே! சராசரியாக ஒரு கிலோ கடல்நீரில் சற்றேறக்குறைய 35 கிராம் உப்பு இருக்கும்!

செவல்குளம் ஆச்சா

கடல் நீரைக் குடித்தால் உப்புக் கரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே! சராசரியாக ஒரு கிலோ கடல்நீரில் சற்றேறக்குறைய 35 கிராம் உப்பு இருக்கும்! 
இந்த உப்பு நீர் நன்னீரைவிட அதிக அடர்த்தியானது ஆகும். கடல்நீரின் சராசரி அடர்த்தி ஒரு மில்லி லிட்டருக்கு 1.025 கிராம் ஆகும். நன்னீரின் அடர்த்தி ஒரு மில்லி லிட்டருக்கு 1.0 கிராம் ஆகும்! 
எனவே கடல் நீர் அடர்த்தி மிகுந்தது! ஆகையால் கடல் எளிதில் உறைந்து விடாது!! சாதாரண நீர் "0' டிகிரி உறைந்து பனிக்கட்டியாகிவிடும்! ஆனால் கடல் நீர் உறைந்து பனிக்கட்டியாக "மைனஸ் 2' டிகிரி வெப்ப நிலை வேண்டும்! 
ஒரு கனசதுர மைல் அளவு கடல் நீர் சுமார் 4.7 பில்லியன் டன் எடை கொண்டதாக இருக்கும்! இதில் 166 மில்லியன் டன் எடை அதில் உள்ள உப்புக்களால் அமைகிறது! 166 மில்லியன் டன் உப்புப் பொருளில் 140 மில்லியன் டன் சமையல் உப்பு! 25 மில்லியன் டன் உப்புப் பொருள் மக்னிஸியம் ஆகும்! ஒரு டன் அளவு, மீதியுள்ள தாது உப்புப்பொருட்களும் இருக்கும்.
அதாவது, கடலிலிருந்து எடுக்கப்பட்ட உப்புப் பொருட்களில் நாம் பயன் படுத்தும் உப்பு மாத்திரம் இல்லை. இதில் மக்னிஷியமும் கலந்து இருக்கிறது! சுமார் 83 சதவீதம் உப்பும், மீதி 16 சதவீதம் மக்னிஷியமும் மற்றும் பல தாது உப்புப் பொருட்களும் இருக்கும்! 
ஒரு கிலோகிராம் கடல் நீரில் 19.353 கிராம் குளோரைடு, 10.76 கிராம் சோடியம், 2.712 கிராம் சல்பேட்டு, 1.294 கிராம் மாங்கனீஸ், 0.413 கிராம் கால்ஷியம், 0.387 கிராம் பொட்டாஷியம், 0.142 பைகார்பனேட்டு, 0.067 புரோமைடு, 0.008 ஸ்ட்ரேண்டியம், 0.004 போரான், 0.001 புளோரைடு என பல தாது உப்புக்கள் கலந்து இருக்கும்!

சரி, இப்போது உப்பு பற்றி சில சுவையான செய்திகளைப் பார்ப்போம்!

  • ""உப்பில்லாப் பண்டம் குப்பையிலே'' என்பது பழமொழி. உப்பின் சிறப்பை உணர்த்த இதைவிட வார்த்தைகள் இல்லை. உப்பின் சிறப்புகளைப் பார்ப்போம்! 
  • உப்பை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதில் முதலிடம் வகிப்பது ஜப்பான்! அங்கு ஒரு நாளுக்கு சராசரியாக ஒவ்வொருவரும் 20 கிராமுக்கு மேல் பயன்படுத்துகின்றனர். 
  • உலகெங்கும் மக்களிடம் பொதுவான ஒரு பழக்கம் உள்ளது. ""உப்பைச் சிந்தக் கூடாது....,ஒருவர் கையில் இன்னொருவர் தரக்கூடாது!...'' என்பதே! சில நாடுகள் புது வீட்டிற்கு முதலில் உப்பைத்தான் கொண்டு போகிறார்கள்! 
  • மத்திய ஆசியா, மங்கோலியா, ஆகிய நாடுகளில் உள்ள ஒட்டகங்களுக்கு உப்புதான் மிக விருப்பமான பொருளாம்!
  • தினசரி படுக்கைக்குச் செல்லுமுன் உப்பு கலந்த வெந்நீரில் வாய் கொப்பளித்து விட்டுப் படுத்தால் வாய் துர்நாற்றம் வீசாது. எந்தவிதப் பல் நோயும் நம்மை நெருங்காது. 
  • உப்பைப் பொடி செய்து நெய்யில் கலந்து உதட்டில் தடவினால் உதட்டிலுள்ள வெடிப்புகள் மறையும்.
  • வெந்நீரில் உப்பு கலந்து 30 நிமிடங்கள் கழித்து பிளாஸ்கில் ஊற்றி வைத்துக் கழுவினால் பிளாஸ்க் தூய்மை பெறும்!
  • உப்பு பதப்படுத்துவதற்கு ஏற்ற பொருள்! மாங்காய், எலுமிச்சை, போன்றவைகள் உப்பில் ஊறிக்கொண்டிருந்தால் வெகுநாட்கள் கெடாமல் இருக்கும். உப்புப் போட்டுக் காய வைத்த நார்த்தங்காய் வெகுநாட்கள் ருசியாக இருக்கிறது! 
  • உப்பையும், வெள்ளரிக்காயையும், சேர்த்து உட்கொண்டால் செரிமானம் ஏற்படும். உடல் பொலிவடையும். பித்தமும் மார்புச் சளியும் நீங்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT