சிறுவர்மணி

விடுகதைகள்

உச்சியில் பூவிருக்கும், ஊருணிக் கரையிலிருக்கும், வெள்ளம் புரண்டு வரும். அவரை வீழ்த்த முடியாது...

DIN

1. உச்சியில் பூவிருக்கும், ஊருணிக் கரையிலிருக்கும், வெள்ளம் புரண்டு வரும். அவரை வீழ்த்த முடியாது...
 2. பூக்கும்போது மஞ்சள், பூத்ததும் சிவப்பு, காய்த்த போதும் சிவப்பு, காய்ந்ததும் கருப்பு...
 3. வந்ததுதான் வந்தீர்களே, வந்து ஒருதரம் போனீர்களே, போய் ஒருதரம் வந்தீர்களே, இனி போனால் வருவீர்களா?
 4. அண்ணன் தம்பி ஐவரும் ஆளுக்கு ஆள் வேறு உயரம், அவரவர் வீட்டுக்கும் ஒரே முற்றம்...
 5. மூன்றெழுத்து விலங்கு, நடு எழுத்து இல்லாவிடில் குழந்தைகள் விரும்புவர், கடைசி எழுத்தோ மாதமாகும்...
 6. ஊர் முழுவதுக்கும் ஒரே விளக்கு, இதற்கு ஒரு நாள் ஓய்வு..
 7. சொம்பு நிறையக் கம்பு. இது என்ன?
 8. தலையைச் சீவினால் திறப்பான்... இவன் யார்?
 9. நாலு கால் உண்டு, ஆட்ட வால் இல்லை...
 விடைகள்:
 1. நாணல் புல், 2. பேரீட்சை, 3. பல், 4. விரல்கள்,
 உள்ளங்கை, 5. கழுதை, 6. நிலா, 7. மாதுளம்பழம்,
 8. இளநீர், நொங்கு, 9. நாற்காலி
 -ரொசிட்டா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT