திமிங்கல வேட்டை நிறுத்தப்படுமா?
திமிங்கிலங்கள் தற்போது எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. கடல் வாழ் உயிரினங்களின் சமநிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
திமிங்கிலங்கள் தற்போது எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. கடல் வாழ் உயிரினங்களின் சமநிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
எனவே பிரேசில் நாடு , "ஃப்ளோரியானோஜோலிஸ் டெக்ளரேஷன்' என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதன் நோக்கம், திமிங்கில வேட்டையை நிறுத்துவதுதான்!
இக்கருத்தை "உலக திமிங்கில பாதுகாப்பு' அமைப்பிடம் பரிந்துரைத்தது. அந்த அமைப்பு ஒரு ஓட்டெடுப்பு நடத்தியது!
Advertisement
அதில் பிரேசில், ஆஸ்திரேலியா உட்பட திமிங்கில வேட்டையைத் தடைசெய்வதற்கு ஆதரவாக 40 நாடுகள் முன்வந்தன.
எனினும், ஜப்பான், நார்வே உள்ளிட்ட 27 நாடுகள் திமிங்கில வேட்டையை ஆதரித்தன. சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், பிரேசிலின் கருத்தை ஆதரிக்கின்றனர். அனேகமாக திமிங்கில வேட்டை நிறுத்தப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது!