சிறுவர்மணி

நினைவுச் சுடர்!: கண்டிப்பும் கருணையும்!

கே.என். பாலகிருஷ்ணன் மடிப்பாக்கம்.

பண்டிட் மதன் மோகன் மாளவியா காசி ஹிந்து பல்கலைக் கழக நிர்மாணத்திற்காக நிதி திரட்டிக் கொண்டிருந்தார். 
நிதி உதவி பெறுவதற்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு மிகப் பெரிய செல்வந்தரின் இல்லத்திற்கு சென்றார். அங்கு இவர் சென்ற நேரத்தில் செல்வந்தரின் மகன் தீக்குச்சியை உரசித் தீப்பற்ற வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்! எரிந்த குச்சிகளை அருகில் போட்டான். பிறகு ஒரு புதிய தீக்குச்சியை எடுத்து உரசித் தீப்பற்ற வைத்தான்! அது எரிந்து முடிந்தவுடன் குச்சியை எரிந்துவிட்டுப்  பிறகு மறுபடியும் இன்னொரு புதிய தீக்குச்சி,......இப்படியே செய்து கொண்டிருந்தான்!
இதைக் கண்ட செல்வந்தர் பையனை ஒரு அறை அறைந்து விட்டார்!
நிதி கேட்கச் சென்ற மதன் மோகன் மாளவியாவிற்கு சங்கடமாகி விட்டது! தான் வந்த நேரம் சரியில்லையோ என்று தோன்றியது! 
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியவாறு வெளியேற ஆயத்தமானார்!
ஆனால் செல்வந்தரோ அவரைப் போக விடவில்லை!  ""வந்த காரணத்தைச் சொல்லாமல் போகலாமோ?...'' என்று கேட்டார். 
உடனே மாளவியா தான் வந்த காரணத்தையும், அதற்கான நிதியுதவியையும் பற்றிச் சொன்னார். 
செல்வந்தர் மாளவியாவை அமரச் சொல்லிவிட்டு, ரூபாய் ஐம்பதாயிரத்துக்கான காசோலையை எழுதி எடுத்துவந்து தந்தார்!
(அக்காலத்தில் இது மிகப்பெருந்தொகை!) புன்னகையுடன் அதை மாளவியாவிடம் தந்தார்.
மாளவியாவுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது! நான்கைந்து தீக்குச்சிகளை வீணாக்கியதற்கே பிள்ளையை அறைந்தவர் இவ்வளவு பெரிய தொகையை புன்னகையுடன் தருகிறாரே என்று!
செல்வந்தர் சிரித்துக் கொண்டே, ""ஒரு தீக்குச்சியின் அருமை தெரியாமல் வீணாக்குபவன் எனது இவ்வளவு பெரிய செல்வத்தை எப்படிக் காப்பாற்றுவான்?.....பொறுப்புணர்வு வேண்டாமா?... அதனால்தான் கண்டித்தேன்!''
மாளவியாவுக்கு வியப்பாக இருந்தது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT