கல்விக் கவசம்!
கண்ணே மணியே!காலையில் விழித்திடு!வெண்பல் துலக்கிடு!
சிறுவர்மணிகல்விக் கவசம்!
கண்ணே மணியே!காலையில் விழித்திடு!வெண்பல் துலக்கிடு!
கண்ணே மணியே!
காலையில் விழித்திடு!
வெண்பல் துலக்கிடு!
வேளையில் குளித்திடு!
முன்னாள் பாடங்கள்
முழுவதும் படித்திடு!
ஒன்றாய் ஏடுகள்
ஒரு பையில் அடுக்கிடு!
எண்ணெய் தேய்த்து
எழில் வகிடெடுத்திடு!
நன்றாய்ச் சீருடை
நலமுடன் உடுத்திடு!
அன்னை தருகிற
அமுதினைப் புசித்திடு!
சென்று வருவதாய்ச்
சிறுகரம் அசைத்திடு!
வண்டி வாகனம்
வருமுன் புறப்படு!
ஒன்றும் இல்லையெனில்
உடன் நடை பிடித்திடு!
என்றும் சாலையில்
இடப்புறம் நடந்திடு!
நின்று கவனித்து
நீயதைக் கடந்திடு!
எண்ணிப் பள்ளியுள்
இணையடி பதித்திடு!
நல்ல உள்ளம் கொண்டோர்
நட்பினை மதித்திடு!
பண்பா சிரியரைப்
பணிவுடன் துதித்திடு!
உண்மை ஒழுக்கத்தை
உணர்வினில் விதைத்திடு!
பொன்னே! மாலையில்
போய் விளை யாடிடு!
குன்றாத் தோளுடல்
கூறினைத் தேடிடு!
கண்டதை ருசித்துக்
கனப்பதைக் குறைத்திடு!
உண்டியைச் சுருக்கி
உயிர்ப்பலம் பெருக்கிடு!
மண்டும் இருட்டெனும்
மடமையை ஒழித்திடு!
அண்டம் பகுத்தறி(வு)
அடைந்திட உழைத்திடு!
கண்ணும் கருத்துடன்
கல்வியைப் பயின்றிடு!
வென்று பெறற்கரும்
வேலைக்கு முயன்றிடு!
துன்பப் படுபவர்
துயரினைத் துடைத்திடு!
இன்னல் அடைபவர்க்(கு)
இயன்றதைக் கொடுத்திடு!
பொன்னும் பொருளுடன்
புகழ் முடி தரித்திடு!
உன்றன் பெயரினை
உலகினில் நிறுத்திடு!