சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா 

DIN

 கேள்வி: வல்லூறுக்கு இரண்டு ஆயுள்காலம் உள்ளதாமே? இது உண்மையா?
 பதில்: உண்மைதான்! ஆனால் சிலவகை வல்லூறுகளுக்கு மட்டுமே இந்த அபூர்வ சக்தி உள்ளது. ஆனால் இதற்காக அந்த வல்லூறு மிக அதிகமான துன்பத்தைச் சந்திக்க நேரிடும்.
 50 வயது கடந்த வல்லூறு, மலை உச்சிகளுக்குச் சென்று தனது அலகை பாறையில் மோதி, மோதி உடைத்துக் கொள்ளுமாம். இந்தச் சமயத்தில் அதனால் உணவு உண்ணவும் நீர் அருந்தவும் இயலாது. இப்படிப் பல நாட்கள் பட்டினி கிடக்க நேரிடும். மேலும் தனது சிறகுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்துக் கொள்ளுமாம்.
 இப்படிப் பல நாட்கள் கடந்த பின்பு (அதுவரை அந்த வல்லூறு உயிரோடு தாக்குப்பிடித்தால் மட்டுமே) புதிய அலகு முளைத்து வளருமாம். சிறகுகளும் புதிதாகத் தோன்றுமாம். இப்படிப் புதுப் பிறப்பு எடுக்கும் வல்லூறு தனது இரண்டாவது ஆயுட்காலத்தைத் தொடங்கி இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு வாழுமாம். ஆனால் இதற்கு அது படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல!
 -ரொசிட்டா
 அடுத்த வாரக் கேள்வி
 அசோக சக்கரத்தில் அமைந்துள்ள சிங்கம், காளை, குதிரை, சக்கரம் ஆகியவற்றுக்கு என்ன பொருள்?
 பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம்
 நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT