பாராட்டுப் பாமாலை! 55 - விழிகளில் வடிந்த கண்ணீர் துடைத்தார்!
அமிதாப் பச்சன் அகிலப் புகழை அடைந்த பாலிவுட் அரும்பெரும் நடிகர்!இமையாய் விழியாய் இருந்திடும் அவர் நம்
சிறுவர்மணிபாராட்டுப் பாமாலை! 55 - விழிகளில் வடிந்த கண்ணீர் துடைத்தார்!
அமிதாப் பச்சன் அகிலப் புகழை அடைந்த பாலிவுட் அரும்பெரும் நடிகர்!இமையாய் விழியாய் இருந்திடும் அவர் நம்
அமிதாப் பச்சன் அகிலப் புகழை
அடைந்த பாலிவுட் அரும்பெரும் நடிகர்!
இமையாய் விழியாய் இருந்திடும் அவர் நம்
இந்திய நாட்டின் பெருமைக்கு உடையர்!
இமய மலையாய் இதயமும் மனமும்
எளியவர்க் குதவும் இனிய நற் குணமும்
அமையப் பெற்ற அதிசய மனிதர்
அடுத்தவர் துயரை அகற்றிடும் புனிதர்!
தமது மாநிலம் உத்தரப் பிரதேசம்
தன்னில் உள்ளோர் விவசாயக் கடனின்
சுமையால் உள்ளம் உடைந்து வெடித்த
சோகத்தைக் கண்டு உருகித் துடித்தார்!
நடித்துச் சேர்த்த பணத்தில் இருந்து
நான்கு புள்ளி அய்ந்து கோடியை
எடுத்து ஆயிரத்து முன்னூற்றுத் தொண்ணூற்று
எட்டு விவசாயிகள் கடனை அடைத்தார்!
அவரது பிறந்த மண்ணில் சொந்த
அண்ணன் தம்பியாய் வாழ்ந்து வருகிற
விவசாயிகளின் கடனை அடைத்து
விழிகளில் வடிந்த கண்ணீர் துடைத்தார்!
அடைந்த கடனுக்கு உரிய வங்கியின்
ஆவணம் தன்னைப் பெற்றிடத் தேர்ந்து
எடுத்து எழுபது பேர் மும்பை வந்திட
ஏற்றமுன் பதிவையும் செய்துதந் துள்ளார்!
ஆசைப்பட்டதைச் செய்து முடித்ததில்
அமைதியும் மகிழ்ச்சியும் குடுகொண்டுள்ளதெனப்
பேசிய செய்தியைத் தம்வலைத் தளத்திலும்
பிறரும் அறிந்திடப் பதிவிட் டிருக்கிறார்!
முன்னரும் இதுபோல் மகாராஷ்டி ரத்தில்
முன்னூற்று அய்ம்பது பேர்களின் கடனை
அன்னவர் அடைத்து வைத்தார் என்பதும்
அவசியம் நினைவு கூறிடத் தக்கது!
இப்படிப் பட்டதோர் எழிற்கலைப் பித்தர்க்கு
ஏடுகள் பாராட்டு எடுத்துப் பூச்சூட்டுதாம்!
அப்படிப்பட்டதோர் கொடைக்குணத்தவர்க்கு
ஆனந்தப் பாராட்டு அளிக்கும் பாத் தீட்டுவோம்!
அன்புள்ளம் கொண்ட அமிதாப் பச்சன்
தாதா சாஹேப் பால்கே விருதினைப்
பெற்றார் இன்று! வாழ்த்துகள் குவிந்தன!
பாமாலை சூட்டிப் பா ராட்டி மகிழ்வோம்!