ஜெயம் பெறலாம்!
ஐந்து கரத்து நாயகனாம்அன்னை பார்வதி முதல்மகனாம்முந்தி விநாயகப் பெருமானை
ஐந்து கரத்து நாயகனாம்
அன்னை பார்வதி முதல்மகனாம்
முந்தி விநாயகப் பெருமானை
முதலில் தொழுதால் ஜெயம்பெறலாம்!
ஆனை முகத்தான் ஐங்கரத்தான்
அரச மரத்தின் அடியமர்ந்தான்
பானை வயிற்று நாயகனின்
பாதம் பணிந்தால் ஜெயம்பெறலாம்!
எளிமை வடிவில் ஆனைமுகன்
ஏழைக்கென்றும் துணைவனவன்!
ஏலியை வாகன மாய்க்கொண்டான்
இணையடி தொழுதால் ஜெயம்பெறலாம்!
Advertisement
அவல்பொரி கடலை கொழுக்கட்டை
அப்பம் கரும்பு முக்கனிகள்
துவளும் கையால் தொட்டுண்பான்
துன்பம் தீர்க்க ஜெயம்பெறலாம்!
அருகு அரளி செவ்வந்தி
அனைத்தும் சூடி அகம்மகிழ்வான்
குறுமுனி தனக்கும் ஞானத்தை
கொடுத்தவன் துணையால் ஜெயம்பெறலாம்!
கமண்டலக் காவிரி சாய்த்தவனாம்!
கையால் பாரதம் வடித்தவனாம்!
வெகுண்டு அனலாசுரன் தன்னை
வென்றவன் அருளால் ஜெயம்பெறலாம்!
பிள்ளைகள் மீது பேரன்பு
பிள்ளையார்க்கு மிகஅதிகம்
தொல்லை தீர்ப்பான் துணையிருந்தால்
தொட்டது எல்லாம் ஜெயம்பெறலாம்!