மெய்யுணர்தல்
ஒருமைப் பாட்டை உள்ளத்தில்உணர்ந்துகொண்ட தூயவர்ஆய்ந்து தெளிந்து வாழுவார்
அறத்துப்பால் - அதிகாரம் 36 - பாடல் 7
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப்
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு.
- திருக்குறள்
ஒருமைப் பாட்டை உள்ளத்தில்
உணர்ந்துகொண்ட தூயவர்
ஆய்ந்து தெளிந்து வாழுவார்
அறிந்திடாமல் தலையிடார்
தெளிந்த சிந்தனை உள்ளோர்க்குத்
திரும்பப் பிறந்து வருந்திடும்
நிலையில்லாமல் போய்விடும்
நிலைத்த புகழ் அமைந்திடும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்