விடுகதைகள்
தங்கை தீட்டிய ஓவியம் தரையில் தவழ்கிறது....
1. தங்கை தீட்டிய ஓவியம் தரையில் தவழ்கிறது....
2. வாணலியில் விரியும் வட்ட வட்ட இலை... இது என்ன?
3. உச்சியின் ஊடே சிக்கல் தீர்ப்பான், சிக்கிக் கொண்டால் பல்லை இழப்பான்....
4. கொடுக்கு இரண்டு இருந்தாலும் வால்தான் கடுகடுக்கும்...
5. உறையில் உறங்குவான், உயிரைப் பறிப்பான்...
6. எரித்தால் சிவப்பு அணைத்தால் கருப்பு...
7. கரித்துண்டு நான்... கடினத்திற்கு நான்... காண்போரைக் கவருவேன்...
8. இரட்டைப் பிறவிகள் இரண்டு பெண்கள்... ஒருத்தி கீழே வந்தால் ஒருத்தி மேலே போவாள்...
9. அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும்...
10. பாறை மேல் இட்ட விதை, பார்ப்பவர் வியக்க முளைத்த விதை...
விடைகள்
1. கோலம்
2. அப்பளம்
3. சீப்பு
4. தேள்
5. வாள்
6. கரித்துண்டு
7. வைரம்
8. தராசுத் தட்டுகள்
9. கரும்பு
10. பல்