தெரிந்து தெளிதல்
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:32 PM
பொருட்பால் - அதிகாரம் 51 - பாடல் 7
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.
- திருக்குறள்
கண்டு கேட்டு அறிந்திடக்
கருத்து கொள்ளாப் பேர்களை
அன்பால் தேர்ந்து கொள்வது
அறிவுடைமை ஆகாது
Advertisement
அறிந்து கொள்ள ஆசையுள்ளோர்
செயலில் தெளிவு இருக்குமே
தெளிவில்லாத பேர்களைத்
தேர்ந்தெடுப்பது தீமையே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்