முகப்பு
சிறுவர்மணி

கடி

""உனக்கு கோடு போட்ட சட்டை பிடிக்குமா?.... கட்டம் போட்ட சட்டை  பிடிக்குமா?'' ""கோடு, கட்டமெல்லாம் சட்டை  போட்டுக்குமா என்ன?.... எனக்கு யார் போட்ட சட்டையும் பிடிக்காது..... 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

""உனக்கு கோடு போட்ட சட்டை பிடிக்குமா?.... கட்டம் போட்ட சட்டை 
பிடிக்குமா?''
""கோடு, கட்டமெல்லாம் சட்டை  போட்டுக்குமா என்ன?.... எனக்கு யார் போட்ட சட்டையும் பிடிக்காது..... நான் போட்டுக்கற சட்டைதான் பிடிக்கும்!''

கே.விஜயலட்சுமி, 
திருப்பத்தூர் - 635601.


""முழுப் பலாப்பழம்னு சொல்லச் சொன்னா, "முளுப் பளாப்பளம்' னு சொல்றான்!....''
""ஏன்?''
""அவன் வாயிலே நுழைய மாட்டேங்குது!''
""முழுப் பலாப்பழம் எப்படி வாயிலே நுழையும்?''

ஜி.சித்ரா, 
திருநெல்வேலி - 607011.


""என் பர்த் டேக்கு உலகமே கேக் செஞ்சு சாப்பிடும்!''
""அப்படியா?''
""ஆமாம்.... நான் கிறிஸ்துமஸ் 
அன்னிக்குத்தான் பிறந்தேன்!''

ஆர்.மகாதேவன்,
திருநெல்வேலி டவுன்.

""டேய் பேராண்டி!.... சாணி டவுசர் போட்டுட்டுப் போடா!.... அப்பத்தான் கொரானா வராதாம்!''
""ஹைய்யோ பாட்டி!.... அது சாணி டவுசர் இல்லே!.... ஸானிடைசர்!''

டி . மலர் வேணி,
ஒடுகத்தூர்.

""ஏண்டா நேத்து யாரும் வகுப்புக்கு வரலே?''
""இன்ஸ்பெக்ஷன் வராங்க...., கிளாஸ் க்ளீனா இருக்கணும்னு நீங்கதானே 
சொன்னீங்க!''

தீ.அசோகன், 
சென்னை - 600019.


""நீ கடைசியா தியேட்டர்லே என்ன சினிமா பார்த்தே?''
"" தியேட்டர்லே டிக்கட் வாங்கி எதுக்கு கடைசியா பார்க்கணும்?.... நான் எல்லாம் ஆரம்பத்திலேயிருந்துதான் பார்ப்பேன்!''

என்.முருகேஷ்,
மங்கைநல்லூர் - 609404.
 

முழு கட்டுரையைப் படிக்க →