உதவி செய்வோம்!
காட்டு யானையும் மாந்தருக்காக மரத்தை இழுக்கிறதே!
காட்டு யானையும் மாந்தருக்காக
மரத்தை இழுக்கிறதே!
வீட்டுப் பூனையும் எலிகளை விரட்டி
நன்மை செய்கிறதே!
மேயும் பசுவும் சத்துப் பாலைச்
சுரந்து கொடுக்கிறதே!
நாயும் கூட நாளும் வீட்டைக்
காவல் காக்கிறதே!
அலைகடலோ, முத்து, பவளம், உப்பு
மீனும் அளிக்கிறதே!
பாறை கூடச் சிலை, மண்டபம்,
படிக்கற்கள் ஆகிறதே!
மண்ணில் நிற்கும் மரமும் காய்த்து
கனிகளைக் கொடுக்கிறது!
சின்னச் செடிகளும் பிணிகளைப் போக்கிடும்
மருந்தாய் ஆகிறது!
இயன்ற வரையில் மக்களுக்குதவி
செய்திடும் அவை போல
இந்த உலகில் நாமும் பிறருக்
குதவி செய்திடுவோம்!