சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: வாசம் தரும் சாம்பிராணி குங்கிலிய மரம்

நான் தான் குங்கிலிய மரம் பேசுகிறேன்.  எனது அறிவியல் பெயர் ஷாரிய ரபஸ்டா என்தாகும்.  நான் டிப்டிரோ கார்பேசி குடும்பத்தைச் சேர்ந்தவன்.

பா.இராதாகிருஷ்ணன்

குழந்தைகளே நலமா?

நான் தான் குங்கிலிய மரம் பேசுகிறேன்.  எனது அறிவியல் பெயர் ஷாரிய ரபஸ்டா என்தாகும்.  நான் டிப்டிரோ கார்பேசி குடும்பத்தைச் சேர்ந்தவன்.  என்னை ஆங்கிலத்தில்  சால் ட்ரீ என்று அழைப்பாங்க.  என்னை மலேய மக்கள் "டாமர்' என்று சொல்வார்கள்.  அதற்கு "எரியும் பொருள்'என்று அர்த்தம்.  சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் நான் மாநில மரம். நான் ஒரு சிறந்த கிருமி நாசினி, உடைந்த எலும்புகளையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் எங்கிட்ட இருக்கு.

உங்களுக்குத் தெரியுமா குழந்தைகளே, இறை வழிபாடுகளில் மத பாகுபாடு கடந்து அனைத்து மதங்களிலும் நறுமணம் கமழும் சாம்பிராணி புகை இடம் பெறுகிறது. இந்த சாம்பிரணி என் பட்டையிலிருந்து வழியும் பிசினிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. அக்கால மக்கள் இந்த சாம்பிராணியைத் தான் கிருமி நாசினியாக பயன்படுத்தினாங்க.  இந்தக் கம்ப்யூட்டர் காலத்தில, கம்ப்யூட்டர் சாம்பிராணி வில்லைக்கு மாறிட்டீங்க, வருத்தாமயிருக்கு. அக்காலத்தில் குழந்தைகளும், பெண்களும் தலைக்கு குளித்து வந்தவுடன் சாம்பிராணி புகை போடுவர். ஏன்னா, சாம்பிராணிப் புகை பெண்களின் கருப்பை தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் தீர்ப்பதுடன், புகையை சுவாசிக்க, அது உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் அனைத்தையும் எந்த வியாதியும் அணுகாமல் காக்கும். தலைக்கு சாம்பிராணி புகை காட்டினால், தலையில் முடி நன்கு வளர்வதுடன்,  நரைத்த முடியே தோன்றாது. என் மரப்பிசின்களிலுள்ள வேதிப் பொருள்கள் புற்று நோயை குணப்படுத்தும் மருத்துவத் தன்மை மிக்கவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க.

என் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யைப் பயன்படுத்தி தான் சோப், மெழுகுவர்த்தி போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன. நான் எண்ணெய், வெண்ணெய், நெய், பெயிண்ட், வார்னிஷ், ஆட்டோ ஆயில் மட்டும் சாக்லெட் மற்றும் மிட்டாய் வகைகள் தயாரிக்க நான் உதவறேன். காடுகளில் வசிக்கும் மக்களுக்கு நான் வாழ்வாதாரமாக இருக்கேன்.  ஒடிஷா, மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் தேக்குக்கு அடுத்தப்படியாக என்னைத் தான் அதிக உறுதியான மரமுன்னு சொல்றாங்க.  எனவே, தான் இந்த மாநிலங்களை சால்மர மாநிலங்கள் என்று சொல்வாங்க.  நானும் காற்றின் வேகத்தைக் தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்துவேன்.

என் விதைகளிலிருந்து  பயோ டீசல் தயாரிக்கலாம்.  என் இலை விளை நிலங்களுக்கு தழை உரமாகும்.  என் பிசினிலிருந்து கார்பன் பேப்பர்களுக்கு ஒட்டும் மை, தட்டச்சு இயந்திர நாடாக்களுக்கு பூசிடும் மை ஆகியவற்றை தயாரிச்சாங்க. இப்போது தான் அவையெல்லாம் இல்லையே.  என் பிசின் ஒட்டுப் பலகைகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் பலகைகளைக் கூட ஒட்டும். 

தண்டவாளங்களுக்கு அடிக்கட்டைகளாக நான் பயன்படுகிறேன்.  என் பிசின் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது.  என் பிசினை  நான் பொடியாக இடித்து, எலுமிச்சம் பழச்சாற்றில் ஊறவைத்து, பின் தட்டைகளாக்கி காய வைத்து இடித்து, தேனில் கலந்து தொடர்ந்து அருந்தி வந்தால் குடல் புண், மூலப் புண் குணமாவதுடன், உடலும் வலுவடையும். குடலில் சேரும் வாயுவை நீக்கவும், கபத்தை வெளியேற்றவும், மூலம், வயிற்றுப் போக்கு போன்றவற்றை போக்குவதற்கு வெள்ளை குங்கிலியம் பயன்படுது. என் பிசினை பொடி செய்து, நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, மூட்டுகளில் பூசி வந்தால் மூட்டு வலி குணமாகும்.  பாலில் கலந்து குடித்தால் இருமல், மார்புச் சளி, ரத்த மூலம் ஆகியவை கட்டுப்படும். குங்கிலியப் பொடியை முள்ளங்கிச் சாற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறும்.

என் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் கஷாயத்துக்கு வீக்கத்தை குணமாக்கும் தன்மை உண்டு.  ஒரு ரகசியத்தை சொல்லட்டுமா குழந்தைகளே. என்னிடமிருந்து தயாரிக்கப்படும் சாம்பிராணிக்கு கரோனா தீநுண்மியை ஓட ஓட விரட்டி அடிக்கும் திறன் இருக்கு.  இப்போ புரியுமே என் அருமையை.

குங்கிலியக் கலய  நாயனார் பற்றி தெரியுமா குழந்தைகளே,  அவர் தஞ்சாவூர் மாவட்டம், திருகடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் இறைவனுக்கு தூய மணம் கமழும் குங்கிலியம் அளிக்கும் தொண்டினை செய்து வந்ததால் அவருக்கு அப்பெயர் வந்தது. மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

 (வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா - சிந்து அதிா்ச்சித் தோல்வி

சூப்பா் 4: தென் கொரியாவை தோற்கடித்தது இந்தியா

கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு அபாகஸ் உபகரணங்கள் வழங்கிய முகநூல் நண்பா்

தலைமை காவலரை தாக்கியவா் கைது

தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT