1. அமைதியான பையன்தான் ஆனாலும் அடிக்காமலே அழுவான்...
2. எங்க அம்மா போட்ட சிக்கலை யாராலும் பிரிக்க முடியாது...
3. ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் ஓடுவான்... மற்றவன் நடப்பான்...
4. உருளும் வீட்டைச் சுற்றிக் கருப்பு வேலி...
5. இவன் வலை தயாரித்து விரித்து வைப்பான், ஆனால் மீன் மட்டும் பிடிக்க மாட்டான்...
6. தலை மட்டும் கொண்டு ஊரெல்லாம் சுற்றும், ஆனால் சிறகில்லை...
7. ஆயிரம் பேருக்கு ஓர் இடைக்கச்சை...
8. சின்னச் சின்ன அறைகள் உண்டு, இது வீடு அல்ல. சிறந்த அழகு கொண்டிருக்கும் சித்திரமும் அல்ல. காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு. கோட்டையும் அல்ல...
9. ஓரிடத்தில் பிறந்த சகோதரர்கள், சிவப்புத் தொப்பி அணிந்தவர்கள், ஒற்றுமையாக ஒரே அறையில் இருப்பவர்கள், ஒருவர் வீட்டின் சுவரில் உரசினால், அனைவரும் எரிந்து விடுவார்கள்...
விடைகள்
1. ஐஸ் கட்டி 2. இடியாப்பம்
3. கடிகார முள்கள் 4. கண், இமை
5. சிலந்தி 6. தபால் தலை 7. துடைப்பம்
8. தேன்கூடு 9. தீப்பெட்டி