அவா அறுத்தல்
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான் வேண்டும் ஆற்றான் வரும்.
அறத்துப்பால் - அதிகாரம் 37 - பாடல் 7
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான் வேண்டும் ஆற்றான் வரும்.
- திருக்குறள்
ஆசை நெஞ்சைத் தாக்காமல்
அழித்து ஒழித்துத் தெளிந்திருந்தால்
கேடு வந்து சேராத
நல்ல நிலை வந்தடையும்
நல்ல செயலை நாடும் உள்ளம்
விரும்புகின்ற வகையிலே
நன்மை வந்து வாய்த்திடும்
நல்ல வாழ்வு சேர்ந்திடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்