திரு. வி. க. பொன்மொழிகள்!
தாயே கண் கண்ட தெய்வம். அவரைவிடச் சிறந்த கோயில் வேறில்லை.
தாயே கண் கண்ட தெய்வம். அவரைவிடச் சிறந்த கோயில் வேறில்லை.
வாழ்க்கை என்னும் மரத்திற்கு இளமையில் கற்கும் கல்வி வேர் போன்றது.
ஒழுக்கம் உடையவன் முகத்தில் தெய்வீக அழகு குடியிருக்கும்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் விலங்கு நிலைக்குத் தள்ளப்படுவான்.
யாரிடமும் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது.
எல்லா உயிர்களும் கடவுளின் பிள்ளைகளே.
அன்பு மற்றும் தியாக குணங்களினால் ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.
ஒழுக்கமுடன் வாழ்பவன் கடவுளின் கட்டளைப்படி வாழ்கிறான்.
நம்மிடம் உள்ள தெய்வீக சக்தியை உணர்வதே வாழ்வின் பயன்.
கடவுள் அளித்த அரிய கொடை உடல். அதை நல்வழியில் பயன்படுத்த வேண்டும்.