1. பெற்றோர் என்னவோ சாதாரண மானவர்கள்தான், பிள்ளைக்குத்தான் வால் இருக்கிறது.
2. இவன் உன்னைச் சுமக்க வேண்டும் என்றால் நீ இவனைச் சுமக்க வேண்டும்...
3. காலும் இல்லை வாலுமில்லை ஆனாலும் தாவுவான், கத்துவான். இவன் யார்?
4. தானாகத் திறந்து திறந்து மூடும் பெட்டி, ஆனால் ஓசை மட்டும் கேட்காது.
5. ஒன்றுக்கு நான்கு கால்கள் இருந்தபோதும் நடக்கத் தெரியாதவன்.
6. வெண்மை நிறப் பெட்டியாம், உள்ளிருக்குதாம் வெள்ளியும் தங்கமும்...
7. தலையில் கிரீடம் கொண்ட மகாராணிக்கு உடம்பெல்லாம் கண்கள்...
8.இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள்தான், ஆனால் ஒருவர் முன்னே போனால் மற்றவர் பின்னால் போவார்...
விடைகள்
1. தவளை, தவளைக்குஞ்சு
2. செருப்பு
3.கடல் அலை
4. கண் இமை
5. நாற்காலி
6. முட்டை
7. அன்னாசிப் பழம்
8. கால்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.