சிறுவர்மணி

புத்தாண்டே வருக!

சித்திரை பிறந்ததுநித்திரை கலைந்தது!இத்தரை குளிர்ந்தது!

அ.கருப்பையா

சித்திரை பிறந்தது
நித்திரை கலைந்தது!
இத்தரை குளிர்ந்தது!
முத்திரை பதித்தது!

பூசல்கள் மறைந்திட
பொறாமை அகன்றிட
நேசமும் நிலைத்திட 
நீ வரம் தந்திடு!

வானமும் பொழிந்திட 
வையகம் செழித்திட 
தானமும் தழைத்திட 
தரணியில் வந்திடு! 

அன்புடன் பழகிட 
அமைதியும் தவழ்ந்திட
இன்பமே நிறைந்திட 
விரைந்து நீ வந்திடு!

நல்லவர் வாழ்த்திட 
நானிலம் செழித்திட 
வறுமை அகன்றிட 
வருக நீ வருகவே!

சேவைகள் தொடர்ந்திட
தேவைகள் நிறைத்திட
புதுமைகள் மலர்ந்திட 
புத்தாண்டு வருகவே!

ஆக்கமும் நடைபெற 
அறிவியல் உதவிட 
ஊக்கத்தை அளித்திட 
புத்தாண்டே புறப்படு!

வளம் பல பெருகிட 
வாய்ப்புகள் குவிந்திட 
"பிலவ' நீ வந்திடு 
பல வரங்கள்  கொடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT