சிறுவர்மணி

பூனை சவாரி

யானைக்குட்டி பூனைக்குட்டிஇரண்டும் நண்பராம்யானை முதுகில் பூனைக்குட்டி

கன்னிக்கோவில் இராஜா

யானைக்குட்டி பூனைக்குட்டி
இரண்டும் நண்பராம்
யானை முதுகில் பூனைக்குட்டி
சவாரி போகுமாம்

ஆற்றில் இறங்க பூனை பயந்து
கரையில் நிற்குமாம்
யானை குளித்து திரும்பும் வரையில்
காத்துக் கிடக்குமாம்

தும்பிக்கையைப் பிடித்துக் கொண்டு
பூனை நடக்குமாம்
பூனை வாலை பிடிக்க முயன்று
யானை தோற்குமாம்

ஓடிப் பிடித்து ஆடும் ஆட்டம்
இரண்டும் ஆடுமாம்
ஓட்டத்திலே பூனையிடம் 
யானை தோற்குமாம்

பூனை மேலே சவாரி செய்ய
யானை விரும்புச்சாம்
யானை ஆசை கேட்ட பூனை
மயங்கி விழுந்துச்சாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT