"ஒருகன் னத்தில் அறைப வர்க்கு
மறுகன் னத்தைக் காட்டென்று'
பெருமைக் குரிய ஏசு நாதர்
நமக்குச் சொன்னார் அறிவுரை
"இன்னா தனவே செய்யும் பேர்க்கும்
இனிய உதவி செய்யென்று'
செந்நாப் போதார் வள்ளு வர்தாம்
செப்பி யுள்ளார் குறளுரை
அவற்றைச் சற்றே நினைவில் கொண்டு
அவனி அமைதி காணவே
தவறு புரிவோர் நமது மனித
உறவோர் என்னும் உணர்வொடு
குறைகள் திருத்தி நிறைகள் பெருக்கி
கூடி வாழ்ந்து மகிழுவோம்
பொறையை மிஞ்சி மனித ஒருமை
பேணும் சக்தி வேறுண்டோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.