அங்கிள் ஆன்டெனா
நாற்காலியை விட முக்காலி மிகவும் நிலையாக நிற்கக் கூடியதாமே, அப்படியா?
கேள்வி: நாற்காலியை விட முக்காலி மிகவும் நிலையாக நிற்கக் கூடியதாமே, அப்படியா?
பதில்: மூன்று கால்களை விட நான்கு கால்கள் இருப்பது மிகவும் நல்லதுதானே என்றுதான் உடனடியாக நமக்குத் தோன்றும். முக்காலி நிலையானது என்பது சற்றே வியப்பாகக் கூட இருக்கும்.
இரண்டு கால்களை உடைய நாம் எப்படி நிலத்தில் நிலையாக நடக்க முடிகிறது? இரண்டு கால்களையும் நமது உச்சந்தலையயையும் இரண்டு கோடுகள் போட்டு இணைத்தால் கிடைக்கும் புவி ஈர்ப்பு விசை நிலையானது. இதனால்தான் நம்மால் நிலையாக நடக்க முடிகிறது.
இதே போலத்தான் நாற்காலிக்கு நான்கு கால்களால் கிடைக்கும் சரியான புவி ஈர்ப்பு விசையை விட முக்காலிக்கு அதன் மூன்று கால்களால் மிகச் சரியான புவி ஈர்ப்பு விசை கிடைக்கின்றது. இதனால்தான் முக்காலியால் கரடு முரடான தரையிலும் நிலையாக நிற்க முடிகிறது. கரடு முரடான தரைகளில் நாற்காலி தள்ளாடவே செய்யும்.