சிறுவர்மணி

இலைகள்!

கிளியின சிறிய சிறகென கிளையில் இலைகள் பசுமைதான்தழுவும்  காற்றில் சிலிர்க்குது!

சி.விநாயகமூர்த்தி

கிளியின சிறிய சிறகென 
கிளையில் இலைகள் பசுமைதான்
தழுவும்  காற்றில் சிலிர்க்குது!
சதங்கை இசையை ஒலிக்குது!

வேம்பின் இலையோ கசப்புதான் 
விஷத்தை முறிக்கும் மருந்துதான் 
நாம் விருந்து உண்ணவே 
வாழை இலைகள் அருமைதான்!

துளசி இலையைத் தின்னலாம் 
தொலைந்து போகும் நோய் பல!
குலுங்கும் மாவின் இலைகளால் 
தோரணங்கள் கட்டலாம்!

பச்சை வண்ண வெற்றிலை 
பாக்கு வெண்சுண்ணாபுடன் 
இச்சையோடு சுவைக்கையில் 
எந்த வாயும் சிவக்குமே!

கரு வேப்பிலைத் தாளிப்பில் 
கமகமக்கும் குழம்பிலே!
அரைத்துப் பூசும் கைகளில் 
அழகு சேர்க்கும் மருதாணி

தட்டுப் போன்ற வடிவுள்ள 
தாமரையின் இலையிலே 
சொட்டு நீரும் தங்கிடா
தழுவி நழுவிக் கொஞ்சுமே!

உதிரும் இலைகள் மரத்திலே 
புதியதாகத் துளிர்த்தல்போல் 
எதுவும் மாறும் என்பதை 
இயற்கை நமக்குக் கூறுது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

தவெக பொதுக்குழு கூட்டம்! மேடைக்கு வந்த விஜய்!

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

SCROLL FOR NEXT