முகப்பு
சிறுவர்மணி

கதைப் பாடல்: குட்டிப் பூனையும் குட்டிப் பெட்டியும்...

குட்டிப் பெட்டி வேண்டுமென்றுகுட்டிப் பாப்பா அழுதது!

Updated On : 6 நவம்பர் 2021, 7:01 pm IST
பகிர்:

குட்டிப் பெட்டி வேண்டுமென்று
    குட்டிப் பாப்பா அழுதது!
அங்கும் இங்கும் ஓடிஓடி 
    அம்மா அப்பா தேடினர்

அவர்கள் போட்ட சத்தத்தில்
    பயந்துபோன பூனைக்குட்டி
பாய்ந்து பாய்ந்து குதித்தது
    அடுக்களையில் புகுந்தது! 

அதையும் இதையும் உருட்டுது
    பூனை போட்ட சத்தத்தில்
அம்மா அப்பா ஓடியே
    நின்று பார்த்து திகைத்தனர்!

Advertisement

அடுக்களையில் பூனைக் குட்டி
    அதனருகே குட்டிப் பெட்டி
குட்டிப்பூனை செய்த குறும்பை
    மகிழ்ச்சி பொங்க பார்த்தனர்!
    

குட்டிப் பெட்டி கிடைத்தது
    குட்டிப் பாப்பா சிரித்தது
குட்டிப் பெட்டியில் இருந்ததோ
    குட்டிப் பாப்பா இனிப்புகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.