முகப்பு
சிறுவர்மணி

உலகம் போற்றும் உத்தமர்!

அண்ணல் காந்தி உழைப்பினால் அடிமை வாழ்வு அகன்றது!

Updated On : 2 அக்டோபர் 2021, 6:00 am IST
பகிர்:

அண்ணல் காந்தி உழைப்பினால் 
அடிமை வாழ்வு அகன்றது!
எண்ணம்போல் செயல்பட
இனிய சுதந்திரம் கிடைத்தது!

தூய்மை, எளிமை, நேர்மையாய் 
தியாகம் செய்தோர் துணை வர
வாங்கித் தந்தார் விடுதலை!
வாய்மை இங்கே வென்றது!

ஏற்றத் தாழ்வு மறையவும்
ஏழைகள் வாழ்வு மலரவும்
தீய மதுவை விலக்கவும்
தொண்டு செய்தார் தூயவர்!

Advertisement

Advertisement

சமத்துவத்தைக் கருணையை
சத்தியத்தைப் பேணினார்!
பலரும் அன்பாய் கூடிடும் 
பண்பை இங்கே விதைத்தவர்!

அமரர் காந்தி பிறந்த நாள் 
அனைவருக்கும் இனிய நாள்!
உலகம் போற்றும் உத்தமர்!
நமது  தேசத் தந்தையாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments