முகப்பு
சிறுவர்மணி

டாக்டர். எஸ் . ராதாகிருஷ்ணன் பொன்மொழிகள்

வெவ்வேறு கலாச்சாரங்களை இணைக்கும் பாலமாக புத்தகங்கள் உள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

வெவ்வேறு கலாச்சாரங்களை இணைக்கும் பாலமாக புத்தகங்கள் உள்ளன.
அறிவே சக்தி! அன்பே நிறைவு!
ஆசிரியர்களே கல்வியின் முதுகெலும்பு.
புதிய சிந்தனைகளை வளர்த்தெடுப்பதே கல்வியின் நோக்கம்.
பொறுமையும், சகிப்புத் தன்மையுமே கடவுளுக்கு நாம் செய்யும் வழிபாடாகும்.
கெளரவத்தை நியாய உணர்வோடு காத்தல் வேண்டும்.
ஆசிரியர் இறந்த காலத்தைக் கண்முன் கொண்டு வருகிறார். நிகழ்காலத்தை வெளிச்சம்போட்டுக் காண்பிக்கிறார். எதிர்காலத்தை வளமுள்ளதாக ஆக்குகிறார்.
சுயமாக சிந்திக்கத் தூண்டுவதே ஆசிரியரின் பணியாகும்.
அறிந்து கொள்ள முயற்சிப்பதே அறியாமையிலிருந்து விடுபடும் வழியாகும்.
எனது பிறந்த தினத்தை, தனியாகக் கொண்டாடாமல், ஆசிரியர் தினமாக அனுசரிப்பதையே நான் விரும்புகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments