சிறுவர்மணி

காப்போம் சுகாதாரம்!

கே.பி.பத்மநாபன்

விடியல் காலை வேளையிலே
    வீட்டின் வெளியே நீர்த்தெளித்துக்
கடிதில் கோலம் இட்டபடிக்
    காப்பாள் அம்மா சுகாதாரம்!

மூலை முடுக்குத் தூசியினை
    முற்றாய்ப் பெருக்கித் துடைத்தபடி
காலை மாலை இருவேளை
    காப்பாள் அக்காள் சுகாதாரம்!

வார நாளின் விடுமுறையில்
    மண்டிக் கிடக்கும் ஒட்டடையை
ஆர அமர நீக்குதலே
    அப்பா காக்கும் சுகாதாரம்!

தூசு தும்பே இல்லாமல்
    துணியால் மேடை நாற்காலி
ஆசை யோடு துடைப்பதுதான்
    அண்ணன் காக்கும் சுகாதாரம்!

பள்ளி வகுப்பு மைதானம்
    "பளிச்சென்' றிங்கே வைத்திடவே
அள்ளிக் களைவோம் குப்பைகளை
    அதுவே எங்கள் சுகாதாரம்!

கழிவு குப்பை சேராமல்
    காத்தல் நமது கடமைதான்
செழிப்பாய் நமது உடல்நலனைச்
    சீராய்க் காக்கும் சுகாதாரம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பாகவே ‘இந்தியன் 2’ பாடல்கள் வெளியாகும்!

முதல்வரின் கருத்து நகைப்பை ஏற்படுத்துகிறது: அண்ணாமலை விமர்சனம்

நடிகர் ரஜினியின் வைரல் புகைப்படம்!

இறுதிக்கட்டத் தோ்தல்: 9 மணி நிலவரப்படி 11.31% வாக்குப்பதிவு

42 கிலோ எடையைத் தூக்கிய சமந்தா! (விடியோ)

SCROLL FOR NEXT