விடுகதைகள்
மனிதர்களே இல்லாத வீட்டில் தலைகீழாகத் தொங்கு பவன்...
1. மனிதர்களே இல்லாத வீட்டில் தலைகீழாகத் தொங்கு பவன்...
2. நீரிலே பிறந்து வாழ்ந்தவன் நீரிலே வேகிறான்...
3. உள்ளே தள்ளி உடையை வெளியே வீசு...
4. கூந்தலுக்கு ஆகாத பூ, கூட்டுக்கும் பொறியலுக்கும் ஆகும் பூ...
5. காலைக் குத்தினாலும் காவலுக்கு உதவுபவன்...
6. மழையில் மலர்ந்தவன் குடைக்கு ஆகாதவன்...
7. தண்ணிரில் வாழ்பவனுக்குத் தலைக்குக் குளிக்க மட்டும் முடியவில்லை...
8. விறகுக்கு ஆகாத மரம், ஆனாலும் வீணான மரம் இல்லை...
விடைகள்
1. வெளவால்
2. மீன்
3. வாழைப்பழம்
4. வாழைப்பூ
5. முள்
6. நாய்க்குடை
7 தாமரை இலை
8.மின் கம்பம்