அறத்துப்பால் - அதிகாரம் 30 - பாடல் 8
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
உடலைச் சுத்தம் செய்திட
நீரில் குளிக்க வேண்டுமே
மனத்தை சுத்தம் செய்திட
வாய்மை காக்க வேண்டுமே!
மாசில்லாத மனத்திலே
நல்ல சொற்கள் தோன்றிடும்
தூய்மையான நெஞ்சினை
வாய்மை நன்கு விளக்கிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.