சிறுவர்மணி

கடி

""ஏன்டா... காய்ச்சல்னு சொல்லி லீவு கேக்கிறயே... ஆனால்  உன் உடம்பு நல்லாதானே இருக்கு...?''""இது மர்மக் காய்ச்சல் டீச்சர்!''

DIN

""ஏன்டா... காய்ச்சல்னு சொல்லி லீவு கேக்கிறயே... ஆனால்  உன் உடம்பு நல்லாதானே இருக்கு...?''
""இது மர்மக் காய்ச்சல் டீச்சர்!''

ப.கதிரவன்,
திருவண்ணாமலை.

""ஏன்டா பேராண்டி...  நம்ம ஊருக்கு நடிகர் அமீர்கான் வந்திருக்காராமே...''
 ""அட... அது அமீர்கான் இல்ல பாட்டி...  ஒமைக்ரான்...''

அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.

""எனக்கு மல்லிகை வாசனை, ரோஜா வாசனை பிடிக்கும்... உனக்கு...?''
""எனக்கு என் நண்பன் சீனிவாசனைத் தான்டா பிடிக்கும்''

கே.இந்து குமரப்பன்,
விழுப்பும்.

""கம்ப்யூட்டர் மாதிரி கணக்கு போடுவேன்னு சொன்னீயே... ஏன் இவ்வளவு லேட்டாகுது?''
""நெட் ஸ்லோ'' சார்.

சரஸ்வதி செந்தில்,
பொறையார்.   

""மகேஷ்... உன்னைவிட வயதில் பெரிய ஆண்களை "டா' போட்டும், பெண்களை "டி' போட்டும் பேசக் கூடாது... கூப்பிடக்கூடாது  தெரிஞ்சுதா...?''
""ஓகே "டாடி!''

டி.கே.குமார்,
கோவை--641 008.


""கோயில் திருவிழாவுக்கு உங்க அப்பாவோட போறத்துக்கு உனக்கு பயமா இருக்கா... ஏன்டா அப்படி சொல்ற..?''
""நான் ஏதாவது தப்பு செஞ்சா.... "உன்னைத் தொலைச்சிடுவேன்... தொலைச்சிடுவேன்னு திட்டுவார்டா... அதனால்தான்...'' 

மு.பெரியசாமி,
திருவாரூர்-614 715
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT