சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

தினமணி

கேள்வி: யானைக்கு ஞாபக சக்தி அதிகம் என்கிறார்களே, அது உண்மையா?

பதில்: பாலூட்டி உயிரினங்களில் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் யானையும் ஒன்று. யானை மிகப் பெரிய அளவில் இருந்தாலும், அதன் உருவம் பயத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அதிகமான மக்கள் யானையை நேசிக்கிறார்கள். அதைப் பார்த்தாலே மகிழ்ச்சி கொள்கிறார்கள். அருகில் போய் தொட்டுப் பார்க்கத் துடிக்கிறார்கள். மற்ற காட்டு விலங்குகள் மேல் இவ்வளவு ஈர்ப்பு யாருக்கும் வருவதில்லை என்பது உண்மை.

யானை எதையும் தனது கடைசிக் காலம் வரை மறக்காது என்று பலர் சொல்வார்கள். இது முற்றிலும் உண்மையில்லை. இருந்தாலும் யானையின் ஞாபக சக்தி அபாரம்தான். யானையின் மூளையும் மிகவும் பெரியதுதான். ஆனால், அதன் உடலின் எடையை ஒப்பிடுகையில் மிகவும் சிறியதுதான். உடலின் அளவுக்கேற்றபடி பார்த்தால் மனித மூளைதான் அளவில் மிகப் பெரியது.   மனித மூளையின்  ஞாபகசக்தியின் (உண ல்ர்ஜ்ங்ழ்) அளவு  7.44. டால்பின்களின் அளவு 5.31. யானையின் அளவு 1.87தான். இருந்தாலும் யானைகள் பலவற்றை சிலகாலம் வரை ஞாபகம் வைத்துக் கொள்ளும் திறன் பெற்றவைதான். 

யானையைப் பற்றி இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் இருக்கின்றன. இங்கே இடம் இல்லாததால் சொல்ல இயலவில்லை. பின்னொரு சமயம் அவற்றை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT