பண்பிலே உயர்ந்த தெங்கள்
பாரத தேசம் ஆகும்!
கண்ணிலே வைத்துக் காக்கும்
கண்ணியம் மிகுந்த தேசம்!
அறிவிலே பெருமை கொண்டு
ஆற்றலில் நிமிர்ந்த நாடு!
நெறியிலே தூய்மை காத்து
நடுநிலை ஆர்க்கும் நாடு!
பாரதி தாகூர் என்னும்
பார்புகழ் கவிஞர் நாடு!
பேரதி சீர்கள் மிக்க
பெருமைகள் நிறைந்த வீடு!
ஏரினைப் போற்றி வணங்கும்
ஏருழவர் உழைக்கும் நாடு!
பாருக்கே உணவைத் தந்து
பாரினைக் காப்போர் வீடு!
பூரண குடியர சென்னும்
புனிதத் தில் உயரும் நாடு!
மாரத வீர ரெல்லாம்
மாண்புடன் காக்கும் நாடு!
பாரத தேசம் என்றும்
பைங்கலை வளர்க்கும் வீடு!
பாரினில் என்றும் மேன்மைப்
பாரத புகழைப் பாடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.