விடுகதைகள்
இடி இடிக்கும், மின்னல் மின்னும் ஆனாலும் மழை பெய்யாது.
1. இடி இடிக்கும், மின்னல் மின்னும் ஆனாலும் மழை பெய்யாது...
2. பறந்தபடி பாடுவான்... உட்கார்ந்தால் உதிரம் குடிப்பான்...
3. வெய்யிலுக்குக் காய்வான், தண்ணீருக்குப் பொங்கு வான்..
4. ஊரிலிருந்து வாங்கி வந்த உருண்டை, உரிக்க உரிக்க வெறுந்தோல்...
5. இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல...
6. திரி இல்லாத விளக்கு, என்ன விளக்கு?
7. ஓடுகிற குதிரைக்கு விலாவெல்லாம் ஓட்டை...
8. வெள்ளை மாளிகைக்கு வாசலும் இல்லை, வழியும் இல்லை...
9. வரிசைக்கு வரும் முந்தி, வெளியே போகும் பிந்தி...
விடைகள்
1. பட்டாசு
2. கொசு
3. சுண்ணாம்பு
4. வெங்காயம்
5. குயில்
6. சூரியன்
7. புகைவண்டி
8. கோழி முட்டை
9. சாப்பாட்டு வாழை இலை
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.