பதில்: மேகத்தில் உள்ள குட்டிகுட்டியான நீர்த் திவலைகள் சூரியனின் வெளிச்சக் கதிர்களைப் பிரதிபலிப்பதால் மேகம் வெண்மையாக இருக்கின்றது. மழை மேகம் மட்டும் ஏன் கருப்பாக இருக்க வேண்டும்? யோசிக்க வேண்டியது. முதலில் மேகம் எப்படி உருவாகிறது.
பூமியிலுள்ள நீர்த் துளிகள் ஆவியாகி மேலே சென்று மேகங்களாகின்றன. இவைதான் வெண்ணிறசூரியக் கதிர்களை பிரதிபலித்து மேகத்துக்கு வெண்மை நிறம் தருகின்றன.
இதே நீர்த்துளி ஆவி அதிகமாகச் சேர்ந்து கொண்டே போவதால் மேகத்தில் அடுக்கடுக்காக நீர்த்திவலைகள் சேர்ந்துகொண்டே போகின்றன. இப்படி சேரச் சேர அந்த மேகம் மிக உயரத்துக்கும் சென்று விடுகிறது. இந்த இரண்டு காரணங்களினால் மேக நீர்த் திவலைகள் சூரிய ஒளியைப் பிரதிபலித்தாலும் அந்த அடுக்குகளைத் தாண்டி அந்த ஒளி நம்மை அடைவது கடினமாகி விடுகிறது. இந்தக் கார்மேகங்கள் மிக உயரத்துக்கும் சென்று விடுவதால் இந்த மழை மேகம் கருப்பாகத்தான் தோன்றும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.