1. இடி இடிக்கும்; மின்னல் மின்னும்; ஆனாலும் மழை பெய்யாது.
2. பறந்தபடி பாடுவான். உட்கார்ந்தால் உதிரம் குடிப்பான்.
3. வெயிலுக்குக் காய்வான். தண்ணீருக்குப் பொங்குவான்.
4. ஊரிலிருந்து வாங்கி வந்த உருண்டை, உரிக்க, உரிக்க வெறுந்தோல்.
5. இவள் ஒரு பாடகி; ஆனால் பெண் அல்ல!
6. திரி இல்லாத விளக்கு, என்ன விளக்கு?
7. ஓடுகிற குதிரைக்கு விலாவெல்லாம் ஓட்டை. அது என்ன?
8. வெள்ளை மாளிகைக்கு வாசலும் இல்லை, வழியும் இல்லை.
9. வரிசைக்கு வரும் முந்தி, வெளியே போகும் பிந்தி?
விடைகள்:
1. பட்டாசு 2. கொசு 3. சுண்ணாம்பு 4. வெங்காயம் 5. குயில் 6. சூரியன்
7. புகைவண்டி 8. கோழி முட்டை 9. சாப்பாட்டு வாழை இலை