அன்புடன் நடந்தாய் தம்பி உன்னை
அவணி போற்றும் உறுதி!
பண்புடன் நடந்தாய் தம்பி உன்னை
பாரோர் போற்றுவர் உண்மை.
ஒழுங்குடன் வணங்கினால் தம்பி உன்னை
ஒருவரும் இகழார் காண்பாய்!
உண்மையை பேசினால் தம்பி உன்னை
உலகம் புகழும் அறிவாய்!
பெரியோர் தம்மை வணங்கு தம்பி
பெருமை அதனால் உனக்கு!
சிறியோர் தம்மை இகழாதே- தம்பி
சிறுமை அதனால் உனக்குதான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.