முகப்பு
சிறுவர்மணி

சுற்றுச்சூழல் காத்திடு!

ஆன்றோர் நல்வாக்கு கேட்டிருஅதன்வழி நீயும் நடந்திடு!

Updated On : 28 ஜனவரி 2024, 12:00 am IST
பகிர்:


ஆன்றோர் நல்வாக்கு கேட்டிரு
அதன்வழி நீயும் நடந்திடு!
என்றும் உண்மை பேசிடு
எதிர்கொள்ளும் இன்னலை மறந்திடு!

நன்றி நவில பழகிடு
நல்லவன் என்ற பெயர் எடு!
செய்நன்றி மறவாது இருந்திடு
சிநேகமாய் இருக்க பழகிடு!

நெகிழியின் உபயோகம் தவிர்த்திடு
நண்பர்களை உன்போல் பழக்கிடு!
மண்வளம் செழித்திட உதவிடு
சுற்றுச்சூழல் காத்திடு உறுதியெடு!

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.