கோப்புப் படம் 
சிறுவர்மணி

கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும்..!

அறிவியல் கண்டுபிடிப்புகள்: யார், எப்போது, எங்கு?

கோட்டாறு கோலப்பன்

அன்றாடப் பயன்பாட்டிலான பொருள்கள், தொழிற்சாலைகளில் பயன்படும் பொருள்கள் , நாட்டின் பாதுகாப்புக்குப் பயன்படும் பொருள்கள் உள்ளிட்ட பலவற்றை கண்டுபிடித்தவர்களைப் பற்றி அறிவோம்.

இடிதாங்கி

பிலடெல்ஃபியாவைச் சேர்ந்த பெஞ்சமின் ஃபிராங்களின் என்பவரால் 1752-இல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆர்க் விளக்கு

அமெரிக்காவைச் சேர்ந்த சி.எஃப். ப்ரஸ் என்பவரால், 1897-இல் கண்டுபிடிக்கப்பட்டது.

யுரேனியம்

அணு உலையில் பெருமளவு பயன்படும் யுரேனியம் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மார்ட்டின் க்ளாப்ராத் என்பவரால், 1841-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அணுகுண்டு

அமெரிக்காவின் ஜூலியஸ் ராபர்ட் ஒப்ன்ஹேமெர் என்பவரால், 1945-இல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஹைட்ரஜன் குண்டு

அமெரிக்காவின் எட்வர்ட் டெல்லரால் 1952-இல் கண்டுபிடிக்கப்பட்டது.

டெட்டனேட்டர்

சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபெல் என்பவரால், 1863-இல் கண்டுபிடிக்கப்பட்டது.

எலக்ட்ரான்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜே.கே.தாம்ஸன் என்பவரால், 1897-இல் கண்டுபிடிக்கப்பட்டது.

துப்பாக்கிக் குண்டு

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த க்ளாட் மினி என்பவர் 1849-இல் கண்டுபிடித்தார்.

பாக்லர் அலாரம்

1851-இல் எட்வின் டி.ஹோல்ம்ஸ் கண்டறிந்தார். இது திருடர்களைக் கண்டறிய உதவுகிறது.

ராணுவ பீரங்கி

ஜெர்மனியில் 1320-இல் கண்டறியப்பட்டன. நவீன பீரங்கிகள் இங்கிலாந்தைச் சேர்ந்த எர்னஸ்ட் ஸ்வின்டன் என்பவரால், 1914-இல் நவீனப்படுத்தப்பட்டது.

கார்புரேட்டர்

ஜெர்மனியைச் சேர்ந்த காட்லிப் டெய்ம்லெர் 1876-இல் கண்டுபிடித்தார். இது மோட்டார் வாகனங்களில் பெட்ரோலையும் காற்றையும் கலக்க உதவுகிறது.

ரேடியோ

இத்தாலியைச் சேர்ந்த கலீலியோ மார்கோனி 1895-இல் கண்டுபிடித்தார். நவீன ரேடியோவை கண்டறிந்தவர் நிக்கோலா டெஸ்லா.

அனிமோ மீட்டர்

காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படும் இந்தக் கருவியை லியன்பாட் டிஸ்டா ஆல்பெர்ட்டி என்பவர் 1450-இல் கண்டுபிடித்தார்.

கால்குலேட்டர்

வில்லியம் ஸீவார்ட் பரௌஸ் 1888-இல் கண்டறிந்தார். அதன் நவீன வடிவத்தை 1893-இல் அவர் உருவாக்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT