இரு வயது பெண் குழந்தைக்கு அபார ஞாபகச் சக்தி இருந்தால் ஆச்சரியம்தானே. எழுத்துகளையும் பொருள்களையும் கூர்மையாகக் கவனித்து, அடையாளம் காட்டும் திறமை பலரையும் வியப்படைய வைத்திருக்கிறது. இந்தக் குழந்தையைப் பாராட்டி, கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தினரும் "எக்ஸ்ட்ரார்டினரி கிராஸ்பிங் பவர் ஜீனியஸ் கிட்' எனும் விருதை வழங்கியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியைச் சேர்ந்த கெüரிசங்கர் புவனேஸ்வரி தம்பதியின் மகள் மகிழினி. பிறந்து ஒரு வயது 10 மாதங்களே ஆகின்றன. ஆங்கில எழுத்துகள் 26, விலங்குகள் 10, எண்கள் 10, உடல்பாகங்கள் 11, உள்உறுப்புகள் 12, பறவைகள் 10, வாகனங்கள் 12, வடிவங்கள் 6, காய்கறிகள் 10, பழங்கள் 15, உணர்வுகள் 6, உணவு வகைகள் 10, விளையாட்டுகள் 10, வானம், சந்திரன், சூரியன், நட்சத்திரம் போன்ற எண்ணற்றவைகளை கூர்மையாகக் கவனித்து அடையாளம் காட்டுகிறார்.
இந்தக் குழந்தையின் அறிவு கூர்மையைக் கவனித்து, அந்தப் பகுதி மக்கள் பலரும் பாராட்டினர். இதையறிந்து அடையாளம் காணும் திறமையை பரிசோதித்து சென்னை கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் குழுவினரும் உறுதிப்படுத்தினர்.
சென்னை ஈக்காட்டுதாங்கலில் அண்மையில் நடைபெற்ற விழாவில், குழந்தை மகிழினிக்கு "எக்ஸ்ட்ராஆர்டினரி கிராஸ்பிங் பவர் ஜீனியஸ் கிட்' எனும் விருதை வழங்கிக் கெüரவித்தனர்.
இதுகுறித்து குழந்தையின் தாய் புவனேஸ்வரியிடம் பேசியபோது:
""கூட்டுக்குடும்பத்தில் வசித்து வருவதால் வீட்டில் உள்ள குழந்தைகள் படிக்கும்போது மகிழினி உடன் இருந்து அனைத்தையும் கவனித்து பார்ப்பது வழக்கம்.
அதே போல் மற்ற குழந்தைகள் ஆங்கில எழுத்துக்கள், படங்களின் பெயர்களைக் குறிப்பிடும்போது அதனை மகிழினி கைவிரல்களால் அடையாளம் காண்பிப்பாள்.
மகிழினியின் திறமையைக் கண்டு ஆச்சரியமடைந்தோம். இதன்பின்னர், கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் தளத்தில் பதிவு செய்தோம்.
குழந்தையின் திறமையை பரிசோதித்து பாராட்டிய கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தினர் இந்த விருதை வழங்கினர்'' என்கிறார் புவனேஸ்வரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.