முகப்பு
சிறுவர்மணி

பள்ளிக்குச் செல்வோம்...!

பள்ளிக்கு தினமும் சென்றிடுவோம் துள்ளி துள்ளி மகிழ்ந்திடுவோம்

Updated On : 23 நவம்பர், 2024 at 6:30 PM
பகிர்:

பள்ளிக்கு தினமும் சென்றிடுவோம்

துள்ளி துள்ளி மகிழ்ந்திடுவோம்

காலை வழிபாட்டில் கூடிடுவோம்.

நாளும் நன்மையை வேண்டிடுவோம்!

எண்ணும் எழுத்தினை அறிந்திடுவோம்

திண்ணமாய் நெஞ்சினில் நிறுத்திடுவோம்

நீதிநூல்களைப் படித்திடுவோம்

சாதி பேதங்களை மறந்திடுவோம்!

புத்தகம் பற்பல படித்திடுவோம்

நித்தம் புதுமைகள் படைத்திடுவோம்

வேற்றுமை நம்முன் களைந்திடுவோம்

ஒற்றுமையாக என்றும் வாழ்ந்திடுவோம்!

-பாவலர் பு.தியாகராசன், சோளிங்கர்.

முழு கட்டுரையைப் படிக்க →