சிறுவர்மணி

கண்டுபிடித்தது யாரு..?

மேக்னடிக் ரிஸனன்ஸ் ஸ்கேன் எனப்படும் எம்.ஆர்.ஸ்கேன் கருவியை அமெரிக்காவைச் சேர்ந்த ரேமண்ட் வி.டமடியன் 1969இல் கண்டுபிடித்தார்.

கோட்டாறு கோலப்பன்

மேக்னடிக் ரிஸனன்ஸ் ஸ்கேன் எனப்படும் எம்.ஆர்.ஸ்கேன் கருவியை அமெரிக்காவைச் சேர்ந்த ரேமண்ட் வி.டமடியன் 1969இல் கண்டுபிடித்தார்.

கம்ப்யூட்டரைஸ்ட் ஆக்ஸியல் டோமோகிராஃபி எனும் கேட் ஸ்கேன் கருவியை இங்கிலாந்தைச் சேர்ந்த காட் ஃபிரேஹவுன்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த ஆலன் கார்கேக் 1972இல் கண்டுபிடித்தனர்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் லெட்டர் பாக்ûஸ ஃபிலிப் டௌனிங் என்பவர் 1891இல் கண்டுபிடித்தார்.

 மெட்டல் டிடெக்டரை அலெக்ஸாண்டர் கிராம்பெல் 1881இல் கண்டுபிடித்தார். நவீன முறையிலான சிறிய மெட்டல் டிடெக்டரை ஜெர்னார்டு ஃபிஸ்னர் என்பவரால் 1931இல் கண்டுபிடித்தார்.

லிஃப்ட் முறையை அமெரிக்காவைச் சேர்ந்த எலிஷா கிரேவ்ஸ் ஒடிஸ் 1852இல் கண்டுபிடித்தார். 1857இல் நியூயார்க்கில் உள்ள ஹாவார்ட் வியாபாரக் கூடத்தில் இது பொருத்தப்பட்டது.

பார்கோட் எனப்படும் குறியீட்டு கோடு முறையை ஜோசப் உட்லண்ட், பெர்னார்ட் சில்வர் 1952இல் கண்டுபிடித்தனர்.

ஒலிபெருக்கியை அமெரிக்காவைச் சேர்ந்த ரைஸ் கெல்லாக் என்பவர் 1924இல் கண்டுபிடித்தார்.

கார்டியாக் பேஸ்மேக்கரை கண்டுபிடித்தவர் வில்சன் க்ராட்பேட்ச்.

சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் முறையை இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் பேட்ரிக், ராபர்ட் எட்வர்ட் ஆகியோர் உருவாக்கினர். முதல் சோதனைக் குழாய் குழந்தை லூயிஸ் ப்ரௌன், 1978 ஜூலை 25இல் பிறந்தது.

 ஜீன் தெரபி எனும் மரபணுவியலைக் கண்டறிந்து முதல் மரபணு சிகிச்சையை பிரான்ûஸ சேர்ந்த டாக்டர் ஆண்டர்சன் 1990இல் அளித்தார்.

ஆஸ்பிரின் மருந்தை டாக்டர் ஃபெலிக்ஸ் ஹாஃப் மென் என்பவர் 1899இல் கண்டுபிடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT