சிறுவர்மணி

விடுகதைகள்

.நான் கல் போன்று கடினமானவன். ஆனால், உங்கள் உடலில் வளர்கிறேன்.

கோட்டாறு கோலப்பன்

1.நான் கல் போன்று கடினமானவன். ஆனால், உங்கள் உடலில் வளர்கிறேன்.

2.எனக்கு பல பற்கள் இருக்கின்றன. ஆனால், என்னால் கடிக்க முடியாது. நான் யார்?

3. நான் பாறை போல கடினமாக இருப்பவன். ஆனால், சூடான நீரில் உடனே உருகிவிடுவேன். நான் யார்?

4.நான் தண்ணீரில் ஆனவன். ஆனால் ஈரமாக இருக்க மாட்டேன். நான் யார்?

5.எனக்கு கைகள் உண்டு. ஆனால், என்னால் கைதட்ட முடியாது. நான் யார்?

6.யாருமே செய்யாத கதவுதான் திறக்கும். தானே மூடும். அது என்ன?

7.பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன?

8.நூல் நூற்கும் நெசவாளிக்குக் கட்டிக் கொள்ள துணி இல்லை. அது என்ன?

9.சட்டையைக் கழற்றினால் சத்துணவு. அது என்ன?

10. கையில்லாமல் நீந்துவான். கால் இல்லாமல் ஓடுவான். அது என்ன?

11.வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை. அது என்ன?

12.உணவை எடுப்பான். ஆனால் உண்ண மாட்டான். அது என்ன?

13.இலையுண்டு, கிளையில்லை, பூ உண்டு, காய் இல்லை. அது என்ன?

14.காற்றைக் குடிப்பான். கைகளில் தவழுவான். அவன் யார்?

15.ஓடையில் ஓடாத நீர். ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?

16.இரவும் பகலும் ஓய்வில்லை. படுத்தால் எழுப்ப ஆள் இல்லை. அவன் யார்?

விடைகள்.

1. பற்கள், 2.சீப்பு, 3.ஐஸ் கட்டி, 4,மேகம், 5.கடிகாரம், 6.கண் இமை, 7.தேங்காய், 8.சிலந்தி, 9.வாழைப்பழம், 10.படகு, 11.உளுந்து, 12, அகப்பை, 13.கரும்பு, 14. பலூன், 15. கண்ணீர், 16. இதயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT